நீங்கள் இரத்ததானம் செய்ய முன்வந்ததற்கு நன்றி

இரத்ததானம் செய்வோர் என்ற முறையில் உங்கள் இரத்தத்தை பெறும் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கியத் தகவல் அடங்கிய சிறு குறிப்புகளுக்கு சரியான பதில் அளிப்பதில் எதாவது சிரமம் இருந்தால் மாருதி இரத்த வங்கி உழியர்களின் உதவியை நாடவும். அவர்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் விவரங்கள் எப்போதும் இரகசியமாக பாதுகாக்கப்படும்.

இரத்ததானம் செய்தபின் மேற்கொள்ள வேண்டியவை

நீங்கள் இரத்ததானம் செய்த பிறகு  அன்றாடம் செய்யும் சாதாரண வேளைகளில் ஈடுபடலாம். எந்தெந்த வேலைக்கு உங்களுடைய அதிகபட்ச கவனம் தேவைப்படுமோ, அவ்விதமான நெருக்கடியான வேளைகளில் ஈடுபட வேண்டாம். இரத்ததானம் செய்த பிறகு கடுமையான வேலைகள் செய்தால் சிலருக்கு தலைச்சுற்றலோ அல்லது மயக்கமோ வர வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேளை அப்படி வந்தால் நன்றாக காற்று வரக்கூடிய பகுதியில் படுத்துக்கொண்டு கால்களை சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஓரிரு மணித்துளியில் சரியாகிவிடும்.

உங்களுடைய இரத்தத்தில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமா?

நீங்கள் தானமாக அளிக்கும் ஒவ்வொரு பிளட் யூனிட்டும் CBC எனப்படும் complete blood count (உடம்பில் உள்ள மொத்த இரத்த அணுக்களின் எண்ணிக்கை), இரத்தத்தின் மூலம் பரவ வாய்ப்புள்ள நோய்க்கான

1. எச்.ஐ.வி (HIV I & II)

2. மஞ்சள்காமாலை (Hepatitis B Virus)

3. மஞ்சள்காமாலை (Hepatitis C Virus)

4. பிறப்பு உறுப்பு நோய்கள் (VDRL) மற்றும்

5. மலேரியா

ஆகிய டெஸ்ட்கள் செய்யப்படும். அப்படி ஏதேனும் வாய்ப்புகள் உள்ளது எனக் கண்டறியப்பட்டால், நீங்கள் அளித்த இரத்தம் நோயாளிக்கு பயன்படுத்தபடமாட்டது.

மேலும் ஒவ்வொரு முறையும் ஒரு நோயாளியின் பிளட் குருப், ஆண்டிபாடிக் ஸ்க்ரீனிங் (ஏதேனும் ஆண்டிபாடீஸ் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள்) மற்றும் கிராஸ் மேட்ச் (நோயாளிகளின் இரத்தமும் தானமாக தரப்பட்ட இரத்தமும் ஒத்துப் போகின்றதா? என்பதை உறுதி செய்யும் டெஸ்ட்). மேற்கூறிய அனைத்துப் பரிசோதனைகளையும் ஒருவர் இரத்ததானம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் பரிசோதனை செய்யப்படும்.

உங்களுடைய இரத்தத்தில் செய்யப்படும் பரிசோதனைகளின் முடிவுகள் பற்றி நீங்கள் அறிய வேண்டிய விஷயங்கள்

ஒரு சில நேரங்களில் பரிசோதனை முடிவுகள் Positive அல்லது Reactive என்று வரலாம். ஆனாலும் கூட உங்களுக்கு அந்த நோய்கள் இல்லாமல் போகவும் நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

ஓர் இரத்த வங்கி என்கின்ற முறையில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் எங்களின் தலையாய கடமை. நீங்கள் தரும் இரத்தத்தின் மூலமாக நோயாளிகளுக்கு ஏதேனும் நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளதா? என்பதை உறுதி செய்வதுதான் எங்கள் நோக்கமேயன்றி, உங்களுக்கு எச்.ஐ.வி (HIV I & II), மஞ்சள்காமாலை (Hepatitis B & C Virus) உள்ளதா என்று துல்லியமாகக் கண்டறிவது இல்லை.

உங்களுக்கு Positive அல்லது Reactive என்று வரும் பட்சத்தில், உங்கள் இரத்தம் மூலம் நோயாளிகளுக்கு அந்த குறிப்பிட்ட நோய்கள் வர வாய்ப்புள்ளது என்றுதான் அர்த்தம். உங்களுக்கு அந்த நோய்கள் இருக்கும் என்று அர்த்தம் அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்களால் Positive அல்லது Reactive என்று ரிசல்ட் தரப்பட்ட இரத்ததானிகளுக்கு, அந்த டெஸ்ட் உறுதி செய்யப்படுவதற்காக செய்யப்பட்ட பரிசோதனைகளுக்கு பிறகு முடிவுகள் NEGATIVE என்று முடிவுகள் வந்துள்ளது.

உங்கள் பரிசோதனையில் POSITIVE அல்லது REACTIVE என்று கண்டறியப்பட்டால் உங்களுக்கு தெரிவிக்கப்படும். மேற்படி அறிவிப்பு 50 நாட்கள் வரை கூட தாமதப்படுத்தப்படலாம்.

மேலும் உங்களுடைய பரிசோதனை முடிவை உறுதி செய்ய கூடுதலான இரத்த மாதிரிகள் உங்களிடமிருந்து எடுக்கப்பட வேண்டியிருக்கலாம். அதன் முடிவுகள் முழுவதுமாக உங்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும்.

இரத்ததானம் பற்றிய கட்டுக்கதைகளும் அதற்குரிய விளக்கங்களும்

எண். தவறான நம்பிக்கைகள் உண்மைகள்
#1 இரத்ததானம் அளித்தப்பின் சோர்வாகவும், அசதியாகவும் இருக்கும். சோர்வாகவும், அசதியாகவும் உணர மாட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நிறைய நீர் அருந்துங்கள். நன்றாக சாப்பிடுங்கள்.
#2 சாதாரண வேலைகளை தொடரமுடியாது. கல் உடைத்தல், கடுமையான உடற்பயிற்சி, பளு தூக்குதல் போன்ற வேலைகளை சுமார் 4 மணிநேரம் தவிர்க்க வேண்டும். மற்ற எல்லா வேலைகளையும் செய்யலாம்.
#3 தானம் அளித்தபின் எனக்கு இரத்தம் குறைந்துவிடும் நீங்கள் மருத்துவரால் தானம் அளிக்கத் தகுதியானவராக சான்றளிக்கப்பட்ட பிறகுதான் உங்களிடம் இருந்து தானம் பெறப்படும். தானம் அளித்தப் பின்பும் உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கும்.
#4 என்னால் மது அருந்த முடியாது நீங்கள் இரத்த தானம் அளித்த மறுநாள் மது அருத்தலாம்.
#5 எனது ஆரோக்கியத்திற்கு எந்த பலனும் இல்லை. நீங்கள் இரத்த தானம் செய்வதால் உங்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், மற்றும் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறையும்.