எச்.ஐ.வி தொற்றை கண்டுபிடிக்க நடைமுறையில் உள்ள டெஸ்ட்கள்

இந்தியாவில் ஒரு இரத்த வங்கி எந்த முறையில் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது பற்றி தெளிவான சட்டங்கள் ஏதும் இல்லை.

1. Rapid Card Test (ராபிட் கார்டு டெஸ்ட்)

இந்த முறைதான் தற்போதைய நடைமுறையில் உள்ள டெக்னாலஜிகளிலே மிகவும் தரம் குறைந்த முறை. இந்த முறையின் விண்டோ பீரியட் சுமார் 45 – 60 நாட்கள். இந்த முறையில் டெஸ்ட் செய்வது மிகவும் எளிது. இது பொதுவாக ஓர் அறுவைச் சிகிச்சைக்கு முன்னால் நோயாளிகளுக்கு எச்.ஐ.வி உள்ளதா? என்பதைக் கண்டறிய வேண்டி உருவாக்கப்பட்ட ஒரு டெக்னாலஜியாகும். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பரவலாக இந்த டெக்னாலஜியில்தான் தானம் பெறப்பட்ட இரத்தம் பரிசோதிக்கப்படுகிறது. அனைத்து அரசு இரத்த வங்கியிலும் பொதுவாக இந்த முறைதான் பயன்பாட்டில் உள்ளது. இந்த டெக்னாலஜியில் டெஸ்ட் செய்த இரத்தத்தை நோயாளிகளுக்கு ஏற்றுவதன் மூலம் எச்.ஐ.வி போன்ற நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

2. ELISA (எலிசா)

இந்த டெக்னாலஜி ராபிட் கார்டு டெஸ்ட்-ஐ விட மேலானது, ECLIA, NAT டெக்னாலஜியை விட கீழானது. இந்த டெக்னாலஜியில் விண்டோ பீரியட் சுமார் 21 – 35 நாட்கள்.

3. ECLIA (Electro Chemiluminescence Immuno Assay)

இந்த டெக்னாலஜி ELISA டெக்னாலஜியை விட மேலானது, NAT டெக்னாலஜியை விட கீழானது. இந்த டெக்னாலஜியில் விண்டோ பீரியட் சுமார் 7 – 11 நாட்கள். இந்த முறைதான் நமது மாருதி இரத்த வங்கியில் பயன்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர், ஜெர்மனி, ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்த முறையில்தான் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4. NAT (Nucleic Acid Testing)

பல வளர்ந்த நாடுகளில் தானமாக பெறப்பட்ட இரத்தத்தை இந்த முறையில்தான் எச்.ஐ.வி டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் விண்டோ பீரியிட் 7 நாட்கள் மட்டுமே.

இந்த டெக்னாலஜியில் உள்ள மிக முக்கியமான குறைபாடு என்னவென்றால், இந்த முறையில் டெஸ்ட் செய்ய அதிகம் செலவாகும். இந்த முறையில் டெஸ்ட் செய்தால் ஒரு யூனிட் இரத்தத்தின் விலை சுமார் ரூபாய் 4,000/- வரை ஆகும். மேலை நாடுகளில் ஒரு நோயாளிக்கு ஏற்படும் இரத்தப் பரிமாற்றச் செலவினை காப்பீட்டு (Insurence) நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் நமது நாட்டில் நோயாளிகளே பணம் கட்டவேண்டி உள்ளது. எனவேதான் தற்போதைய சூழ்நிலையில் NAT முறையில் தானம் பெறப்பட்ட இரத்தத்தை பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப் படவில்லை.

தானம் பெறப்பட்ட இரத்தத்தை NAT முறையில் பரிசோதனை செய்வதே நடைமுறைகளில் உள்ள முறைகளிலேயே சிறந்த முறை. ஆனாலும் இதற்கும் விண்டோ பீரியட் 7 நாட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய காரணங்களால் தான், மாருதி இரத்த வங்கியில் இரத்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. ஆகவே, உங்களின் தனிப்பட்ட நேர்காணலின் போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளிக்குமாறு வேண்டுகிறோம். இந்த உண்மையான பதில்களே நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். இது இரத்த தானம் செய்யும் உங்களது முக்கியமான கடமையாகும்.

ஒரு அன்பான வேண்டுகோள்

தயவுசெய்து உங்களது HIV நிலைமையை பற்றி, ஏதேனும் சந்தேகம் இருந்து, அதை தெளிவு செய்வதற்காக இரத்ததானம் செய்யாதீர்கள். அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் உள்ளூர் சுகாதாரத்துறையை (ICTC) அணுகி விரைவான இலவசமான பரிசோதனையை செய்துகொள்ளவும். தள்ளிப்போடாமல் இன்றே ICTC-க்கு செல்லவும்.