1. இரத்தம் என்பது உயிரை பாதுகாக்கும் திரவம். இது உடலிலுள்ள இதயம், தமனிகள் (Artery), சிரைகள் (veins) மற்றும் தந்துகிகள் (Capillaries) மூலமாக உடலில் சுழற்சி செய்கிறது.
  2. இரத்தம் நமது உடம்பிற்கு சக்தி, தாது உப்புகள், ஹார்மோன்கள், உயிர்ச்சத்துகள் எனப்படும் வைட்டமின்கள், எதிர்வுயிரி (Antibiotic) மருந்துகள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.
  3. இரத்தம் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் மற்றும் கரியமில வாயுவை எடுத்துச்செல்கிறது.
  4. இரத்தம் நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல், காயங்களை ஆறவைக்கவும் உதவுகிறது. உங்களுடைய உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
  5. உங்களுடைய உடல் எடையில் 7 சதவிகிதம் இரத்தமாக இருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தையின் உடலில் ஒரு கிண்ணம் அளவுள்ள இரத்தம் இருக்கும்.
  6. இரத்த வெள்ளையணுக்கள் கிருமிகளின் தொற்றினை எதிர்க்கும் முதன்மை நோய் எதிரியாகும்.
  7. கிரோனுலோசட்ஸ் என்ற ஒருவகை இரத்த வெள்ளையணுக்கள், இரத்த நாள சுவர் மீது உருண்டு பாக்டீரியாக்களை தேடி அழிக்கிறது.
  8. இரத்த சிவப்பணுக்கள் உடலிலுள்ள உறுப்புகளுக்கும், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது.
  9. இரண்டு மூன்று சொட்டு இரத்தத்தில் சுமார் ஒரு பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் காணப்படும்.
  10. இரத்த சிவப்பணுக்கள் சுமார் 120 நாட்கள் இரத்த ஓட்ட மண்டலத்தில் உயிருடன் இருக்கும்.
  11. இரத்த தட்டணுக்கள் இரத்தம் உறைதலுக்கு உதவி புரிந்து லுகீமியா மற்றும் இதர புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.