
- இரத்தம் என்பது உயிரை பாதுகாக்கும் திரவம். இது உடலிலுள்ள இதயம், தமனிகள் (Artery), சிரைகள் (veins) மற்றும் தந்துகிகள் (Capillaries) மூலமாக உடலில் சுழற்சி செய்கிறது.
- இரத்தம் நமது உடம்பிற்கு சக்தி, தாது உப்புகள், ஹார்மோன்கள், உயிர்ச்சத்துகள் எனப்படும் வைட்டமின்கள், எதிர்வுயிரி (Antibiotic) மருந்துகள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.
- இரத்தம் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் மற்றும் கரியமில வாயுவை எடுத்துச்செல்கிறது.
- இரத்தம் நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல், காயங்களை ஆறவைக்கவும் உதவுகிறது. உங்களுடைய உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
- உங்களுடைய உடல் எடையில் 7 சதவிகிதம் இரத்தமாக இருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தையின் உடலில் ஒரு கிண்ணம் அளவுள்ள இரத்தம் இருக்கும்.
- இரத்த வெள்ளையணுக்கள் கிருமிகளின் தொற்றினை எதிர்க்கும் முதன்மை நோய் எதிரியாகும்.
- கிரோனுலோசட்ஸ் என்ற ஒருவகை இரத்த வெள்ளையணுக்கள், இரத்த நாள சுவர் மீது உருண்டு பாக்டீரியாக்களை தேடி அழிக்கிறது.
- இரத்த சிவப்பணுக்கள் உடலிலுள்ள உறுப்புகளுக்கும், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது.
- இரண்டு மூன்று சொட்டு இரத்தத்தில் சுமார் ஒரு பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் காணப்படும்.
- இரத்த சிவப்பணுக்கள் சுமார் 120 நாட்கள் இரத்த ஓட்ட மண்டலத்தில் உயிருடன் இருக்கும்.
- இரத்த தட்டணுக்கள் இரத்தம் உறைதலுக்கு உதவி புரிந்து லுகீமியா மற்றும் இதர புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.
